திருப்பூர், முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை இணைந்தார். முதல்-அமைச்சர் விஜய் இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால், பிரதான கட்சி வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவு கேட்டு அந்த கட்சியின் தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான விஜய் இன்று (புதன்கிழமை) தாராபுரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். பொதுக்கூட்டம் இதற்காக தாராபுரத்தில் இருந்து உடுமலை செல்லும் சாலையில் கொண்டரசம்பாளையம் மாருதி நகரில் 54 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக மைதானம் தயார் செய்யப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆதரவு திரட்டுகிறார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு 'கியூஆர்' கோடுடன் கூடிய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்-அமைச்சர் விஜய் புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைப்பகுதிக்கு தற்போது வந்தடைந்தார். முன்னாள் அமைச்சர் செம்மலை பொதுக்கூட்டம் நடைபெறும் மேடைப்பகுதி அருகே குவிந்துள்ள த.வெ.க. தொண்டர்கள் முதல்-அமைச்சர் விஜய்யை ஆரவாரம் செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை இணைந்தார். முதல்-அமைச்சர் விஜய், செம்மலை கொண்டு வந்த தவெக கட்சியின் துண்டை வாங்கி அவர் கழுத்தில் போட்டு கட்சியில் சேர்த்துக் கொண்டார். அ.தி.மு.க.வில் இருந்து விலகல் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வந்த சூழலில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த செம்மலை அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் எனக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. தற்போது அதிமுக கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து அக்கட்சியில் பயணிக்க எனது மனம் இடம் தரவில்லை. ஆகையால் தான் தற்போது அதிமுக கட்சியில் இருந்து விலகும் மிக கடினமான முடிவை எடுத்துள்ளேன்” என்று தெரிவித்திருந்தார். தற்காலிக சபாநாயகர் கடந்த 2001 ஆம் ஆண்டு ஓமலூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட செம்மலை, சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆக வெற்றி பெற்றார் செம்மலை. கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்ட சபையில் தற்காலிக சபாநாயகராகவும் இவர் பணியாற்றியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு இவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் இவருக்கு சீட் வழங்கப்படவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/semmalai-joined-tvk-in-the-presence-of-vijay




