லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நடிகர் அஜித் குமாரை பிரபல மூத்த நடிகை ராதிகா சரத்குமார் நேரில் சந்தித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் A special guest will be waving the green flag at Silverstone this weekend! C. Joseph VIJAY The Indian actor and Chief Minister of Tamil Nadu, will be joining us to support our Indian drivers in the UK and officially start the in front of the… — Le Mans Cup (@LeMansCup) September 10, 2026 மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி சில்வர்ஸ்டோனில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதல்-அமைச்சர் விஜய் லண்டனில் நாளை (செப் 12) தொடங்கி வைக்கவுள்ளார். இந்த கார் பந்தயத்தில் போட்டியில் பங்கேற்க உள்ள அஜித்குமார், ஏற்கெனவே லண்டனில் தனது குழுவுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். முன்னதாக, தமிழ்நாடு சட்டசபையின் 110 விதியின் கீழ், அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் ஒலிம்பிக் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் புகழ்பெற்ற ‘சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்’-ஐ பார்வையிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கார் பந்தயத்தில்தான் நடிகர் அஜித்குமார் தனது குழுவினருடன் பங்கேற்கிறார். அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை விஜய் தொடங்கி வைக்க இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக லண்டனில் தங்கியிருந்து தனது குழுவினருடன் அஜித் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அஜித்குமாருடன் நடிகை ராதிகா சந்திப்பு இந்நிலையில், அஜித்தின் கார் ரேஸ் பந்தயத்தை காண நடிகை ராதிகா சரத்குமார் லண்டன் சென்றுள்ளார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்தை சந்தித்து பேசும் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ராதிகா நடிகை திரிஷாவை சந்தித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actress-radhika-meets-razor-ajithkumar-in-london




