சென்னை, மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- My life is my message: சத்தியத்தின் பாதையில் இருந்து ஒருபோதும் விலகாத மகாத்மா காந்தியின் பிறந்தநாள். இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என அவர் வாழ்க்கையில் பெற்ற ஒவ்வொரு அனுபவத்தையும் கொண்டு தொடர்ந்து தன்னைச் செதுக்கிக் கொண்டவர் காந்தியடிகள். தொடர்ந்து சமூகத்தோடு உரையாடினார். தொடர்ந்து தன்னையும் தன் கருத்துகளையும் மாறுபாட்டுக்கு உட்படுத்திக் கொண்டே வந்தார். ஆனால், உண்மையாக இருந்தார். அதனால்தான், 'என் வாழ்க்கையே நான் விட்டுச் செல்லும் செய்தி' என அவரால் கூற முடிந்தது. அவரது பெருமையைப் போற்றும் வகையில், நமது திராவிட மாடல் ஆட்சியில் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தேன், மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தைப் பழமை மாறாமல் புதுப்பித்தோம், உத்தமர் காந்தி கிராம ஊராட்சி விருதுகளை மீண்டும் வழங்கத் தொடங்கினோம். காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! அவரிடம் இருந்து கற்போம்! மதநல்லிணக்கம் போற்றும் இந்தியாவைக் காப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/let-us-study-the-life-of-gandhiji-let-us-save-india-mk-stalin




