திருச்செந்தூர், திருச்செந்தூரில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணின் வீட்டில், 32 சவரன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற பணிப்பெண்ணை புகார் அளித்த 1 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வீட்டு பணிப்பெண் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலைமுத்து மனைவி மாரியம்மாள் (வயது 61). இவரது வீட்டில் அதே பகுதியில் செட்டி அம்மன் கோவில் அருகே வசிக்கும் முத்துமாலை என்பவரது மனைவி இசக்கியம்மாள்(40) கடந்த 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். 32 சவரன் நகைகள், ரூ.65 ஆயிரம் பணம் திருட்டு இந்த நிலையில், மாரியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பணிப்பெண் இசக்கியம்மாள், மாரியம்மாளின் வீட்டிற்குச் சென்று அங்குள்ள பீரோ மற்றும் மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளார். நகை, பணம் திருட்டால் அதிர்ச்சி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி மாரியம்மாள் வீட்டிற்கு திரும்பியுள்ளார். நேற்று முன்தினம் பீரோ மற்றும் மேஜை டிராயரைத் திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த தாலி முறுக்கு செயின், முத்துமாலை, பெண்டன் மாலை, ஓம் டாலர் செயின், வாட்ச், வளையல், சிமிக்கி கம்மல், மோதிரங்கள் உள்பட மொத்தம் 32 சவரன் தங்க நகைகளும், ரூ.65 ஆயிரம் ரொக்கமும் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். போலீசாரிடம் புகார் இதுகுறித்து பணிப்பெண் இசக்கியம்மாளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாரியம்மாள் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என இசக்கியம்மாள் மறுத்துள்ளார். உடனடியாக இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் மாரியம்மாள் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர். புகார் அளித்த 1 மணி நேரத்திற்குள் நகை, பணம் மீட்பு புகார் அளிக்கப்பட்ட ஒரே மணி நேரத்திற்குள் பணிப்பெண் இசக்கியம்மாளை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த திருடப்பட்ட 32 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் முழுமையாகக் கைப்பற்றினர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruchendur-maid-arrested-for-stealing-32-sovereigns-worth-rs65-thousand




