சிம்லா, இமாசலபிரதேச மாநிலத்தில் பனிப்பாதையில் வழுக்கி விழுந்து 2 பக்தர்கள் பலியாகினர், 11 பேர் லேசான காயமடைந்தனர். பனிப்பாதையில் வழுக்கி விழுந்த பக்தர்கள் இமாசலபிரதேச மாநிலம் லாஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தில் டிரில்புரி கோரா பகுதியில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் திடீர் பனிப்பொழிவு ஏற்பட்டது. அப்போது பரிக்ரமா சென்ற பக்தர்கள் பனியால் மூடப்பட்ட பாதையில் வழுக்கி விழுந்தனர். 2 பேர் பலி, 11 பேருக்கு லேசான காயம் இதில் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கைச் சேர்ந்த தாவா டோமா பூட்டியா (வயது 74), கெய்லாங்கைச் சேர்ந்த யாங்சின்(64) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் லேசான காயமடைந்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (என்.டி.ஆர்.எப்.) விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கெய்லாங் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/two-pilgrims-die-after-slipping-and-falling-on-a-snow-covered-path-in-himachal-pradesh




