சென்னை, காங்கிரஸ் இனியாவது தனது வெறுப்பரசியலை நிறுத்தி விட்டு, ஆரோக்கியமான அரசியலின் அடிப்படையை கற்றுக் கொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மாணவர் சங்கத் தேர்தல் இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில், மாணவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அமோக வெற்றி பெற்றுள்ள அகில பாரத வித்தியார்த்தி பரிசத்(ABVP) மாணவர் அமைப்பின் வேட்பாளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். சமூக விரோதிகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி முன்னெடுத்த அனைத்து திசை திருப்பு நாடகங்களையும் முறியடித்து, பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையும், டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள 4 முக்கியப் பதவிகளில் 3 பதவிகளையும் ABVP அமைப்பு வென்றுள்ளது, தேசத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கான பாடம். ஆயிரம் நவீன உத்திகளைக் கொண்டு நமது இளைஞர்களை யார் Influence செய்ய நினைத்தாலும், இறுதியில் தேசியமும் தெய்வீகமுமே வெல்லும். தோல்வியை மட்டுமே சந்திக்கும் காங்கிரஸ் எனவே, “சேற்றிலும் அடிவாங்கியாச்சு, சோற்றிலும் அடிவாங்கியாச்சு” என்ற பிரபல நகைச்சுவை வசனத்தைப் போல, பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி, கல்லூரியின் மாணவர் சங்கம் என கால் பாதிக்கும் அத்தனை தேர்தல்களிலும், தோல்வியை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ், இனியாவது தனது வெறுப்பரசியலை நிறுத்தி விட்டு, ஆரோக்கியமான அரசியலின் அடிப்படையை கற்றுக் கொள்ள வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-younger-generation-has-chosen-nationalism-nainar-nagendran




