ஹாலிவுட் நட்சத்திரங்களான ஜெண்டயா (Zendaya) மற்றும் டாம் ஹாலண்ட் (Tom Holland) ஆகியோர் 'ஸ்பைடர்மேன்' படங்களில் ஜோடியாக நடித்து உலகளவில் பிரபலமானவர்கள். 2016 முதல் காதலித்து வந்த இந்த ஜோடி, தங்கள் ரகசியத் திருமணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினர். இந்த ஜோடி ஆகஸ்ட் 4 அன்று தங்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கு இங்கிலாந்தில் உள்ள 'பீவர்புரூக் ஹோட்டல்' (Beaverbrook Hotel) சொகுசு விடுதியில் பிரத்யேக வரவேற்பு விருந்து ஒன்றை அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Zendaya and Tom Holland 'ஸ்பைடர் மேன்' திரைப்படங்களின் படப்பிடிப்பின் போது சந்தித்த இந்த ஜோடி, பல ஆண்டுகளாகத் தங்களை நல்ல நண்பர்களாகவே அடையாளப்படுத்திக் கொண்டனர். 2021-ம் ஆண்டு இவர்களது காதல் விவகாரம் அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்தது. தொடர்ந்து கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெண்டேவாவின் விரலில் நிச்சயதார்த்த மோதிரம் தென்பட்டதை அடுத்து, இவர்களது நிச்சயதார்த்த செய்தி உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற விருது விழாக்களில் ஜெண்டேவா திருமண மோதிரத்துடன் வலம் வந்ததால், இவர்களுக்குள் ரகசியத் திருமணம் முடிந்துவிட்டதாக வதந்திகள் பரவின. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் அளித்த பேட்டி ஒன்றில், இணையத்தில் பரவிய போலி புகைப்படங்களை மறுத்துப் பேசிய டாம் ஹாலண்ட், ``எங்கள் உண்மையான திருமணத்திற்கு என் உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர்" என்று கூறித் தங்களது திருமண செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். சமீபத்திய பேட்டிகளில் ஜெண்டேவாவைத் தனது "மனைவி" என்றே டாம் ஹாலண்ட் குறிப்பிட்டு வரும் நிலையில், தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முழுமையாகப் பொதுவெளியில் பேச விருப்பம் தெரிவிக்கவில்லை. Zendaya and Tom Holland "நாங்கள் பொது வாழ்க்கையில் இருந்தாலும், எங்கள் உறவின் மகிழ்ச்சியைத் தக்கவைத்துக் கொள்ளச் சில எல்லைகளையும் தனிப்பட்ட ரகசியங்களையும் பேண விரும்புகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார். அதே நேரம் இந்த ஜோடிக்கு ஹாலிவுட் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். கோலிவுட் ஸ்பைடர்: தமிழில் கதை கேட்கும் ஜோ. தயாரிப்பாளராகும் ஹெச். வினோத். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://cinema.vikatan.com/hollywood/hollywood-actor-tom-holland-married-fellow-actor-zendaya



