சென்னை, 2031-ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுத் துறையில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 665 பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என குவெஸ் கார்ப் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுத் துறையில் திறன் வாய்ந்த பணியாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2031-ம் ஆண்டில் இந்தத் துறையில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 665 பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவெஸ் கார்ப் நிறுவன ஆய்வறிக்கை இந்தியாவின் மிகப்பெரிய ஆள்சேர்ப்பு மற்றும் மனிதவள நிறுவனமான குவெஸ் கார்ப் நிறுவனம், வேலை வாய்ப்பு தொடர்பான ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு, நிறுவனங்களின் கணிப்புகள், தொழில் நிறுவனங்களின் மதிப்பீடுகள் மற்றும் இரண்டாம் நிலை ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் கூறியிருப்பதாவது: பணியாளர்கள் தேவை அதிகரிப்பு இந்தியாவில் பல்வேறு துறைகளில் திறன் வாய்ந்த பணியாளர்களுக்கான தேவைக்கும், வேலைவாய்ப்புச் சந்தைக்கு வரும் பணியாளர்களின் எண்ணிக்கைக்கும் இடையே இடைவெளி இருக்கிறது. ஏஐ மற்றும் தரவுத் (டேட்டா) துறையில் தரவு அறிவியலாளர், தரவு பொறியாளர், செயற்கை நுண்ணறிவு பொறியாளர், தரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தொடர்ந்து தேவை அதிகரித்து வருகிறது. 2 லட்சம் பணியாளர்கள் தேவை ஏஐ மற்றும் தரவுத் துறையில் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் பேர் படித்து முடித்து வேலை வாய்ப்புக்கு வருகின்றனர். ஆனால், தொழில் நிறுவனங்களின் ஒரு ஆண்டுக்கான பணியாளர் தேவை சுமார் 2 லட்சம் என்ற அளவில் உள்ளது. இதனால் தற்போதே தேவைக்கும், கிடைக்கும் திறன் வாய்ந்த பணியாளர்களின் எண்ணிக்கைக்கும் இடையே பெரிய இடைவெளி காணப்படுகிறது. 2031-ம் ஆண்டில் 2.29 லட்சம் பணியாளர்கள் பற்றாக்குறை இந்த இடைவெளி வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும். அதன்படி, 2031-ம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுத் துறையில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 665 பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடும். எனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு பல்வேறு துறைகளில் விரிவடைந்து வரும் நிலையில், அதற்கேற்ப தேவையான திறன்களைக் கொண்ட பணியாளர்களை உருவாக்குவது முக்கியமானதாகிறது. இந்த துறை தவிர இணையப் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, கட்டுமானம், சுகாதாரம், திறன் தொழில்கள், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளிலும் எதிர்காலத்தில் திறன் வாய்ந்த பணியாளர்களுக்கான தேவை அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/artificial-intelligence-sector-faces-shortage-of-229-lakh-workers-by-2031




