தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில் வீட்டில் உள்ள மின்சார மோட்டாரை நகர்த்திய போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து கொத்தனார் உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே உள்ள அனவரதநல்லூர் மேலத் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் ராஜதுரை (வயது 43), கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மின்சாரம் பாய்ந்து கொத்தனார் உயிரிழப்பு இந்த நிலையில் இன்று அதிகாலையில் தெரு குழாயில் இருந்து வரும் தண்ணீரை உறிஞ்சுவதற்காக தன் வீட்டிலுள்ள மின்சார மோட்டாரைப் பொருத்தியுள்ளார். அப்போது அவர் மோட்டாரை நகர்த்த முயன்றபோது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த முறப்பநாடு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ராஜதுரையின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/bricklayer-dies-after-being-electrocuted-while-moving-motor




