சென்னை தமிழக வேளாண் பட்ஜெட்டில், வேளாண் பயிர் கடன் ரூ.17 ஆயிரம் கோடியும், வேளாண் மூலதன கடன் ரூ.3 ஆயிரம் கோடியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக சட்டசபையில், 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வேளாண் பட்ஜெட் இன்று காலை 9.30 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் ஆசி பெற்றார். இதன்பின்னர் சபாநாயகர் பிரபாகர் அவைக்கு வருகை தந்ததும், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தந்தனர். அவையில் திருக்குறள் வாசிக்கப்பட்டது. வேளாண் பட்ஜெட் தாக்கல் இதனை தொடர்ந்து, தமிழக வேளாண் துறை அமைச்சர் வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அவர் பேசும்போது, த.வெ.க. அரசின் முதல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விவசாய குடும்பங்களின் மகனாக இருப்பதால் இலவச மும்முனை மின்சாரத்தை தொடர முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளார். வேளாண்மையை பெருக்க பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம் என கூறினார். தொடர்ந்து பட்ஜெட்டில் விவசாயிகள் பயன் பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை அறிவித்து அவர் பேசினார். இதன்படி, நெல் விதை மற்றும் விநியோக மானியத்துக்கான மாநில அரசின் சிறப்பு திட்டத்துக்கு ரூ.34.12 கோடி அதிக ஊட்டச்சத்து நிறைந்த குலசாமை, பாப்பரை, சீமை தினை ஆகிய பயிர்களை அறிமுகப்படுத்த செயல் விளக்கத்திடல்கள் அமைக்க ரூ.30 லட்சம். மாணவர்கள் கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்களுக்காக 6 புதிய பேருந்துகள் வாங்க ரூ.3 கோடி தஞ்சையில் நம்மாழ்வார் பெயரில் "உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி ரூ.5 கோடி வேளாண்மை பட்டயப்படிப்பு கல்லூரி ரூ.15 கோடி 5 வேளாண் பொறியியல், பயிற்சி மையங்கள் ரூ.4.6 கோடி பருத்தி பருத்தி உற்பத்தியை உயர்த்த மறுமலர்ச்சி இயக்கம் பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்திற்கு ரூ.27 கோடி பெண்கள் பெண்களுக்கு 50% மானியத்தில் வேளாண் டிரோன் வெற்றி வான் மகள் திட்டம் - பெண்களுக்கு டிரோன் பயிற்சி வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டம் ரூ.10 கோடி தென்னை, பனை தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் ரூ.5 கோடி தென்னை சிறப்பு திட்டம் ரூ.41 கோடி பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கம் ரூ.203.64 கோடி பனை பாதுகாப்பு இயக்கம் ரூ.2 கோடி கடன் வேளாண் பயிர் கடன் ரூ.17 ஆயிரம் கோடி வேளாண் மூலதன கடன் ரூ.3 ஆயிரம் கோடி பொதுவான திட்டங்கள் சூரிய சக்தி பம்புசெட்டுகளுக்கு மானியம் ரூ.23 கோடி நஞ்சற்ற உற்பத்தி - உலகளாவிய ஏற்றுமதி திட்டம் ரூ.8.43 கோடி புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ரூ.12 கோடி கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம் ரூ.9 கோடி மக்காச்சோளம் உற்பத்தியை அதிகரிக்க ரூ.36 கோடி மிளகாய், கொத்தமல்லி சாகுபடி திட்டம் ரூ.49 லட்சம் ரம்புட்டான், டிராகன், லிச்சி ஊடு பயிர் திட்டம் வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் ரூ.8.13 கோடி வேளாண் துறை மூலம் 37.51 லட்சம் மரங்கள் நடப்படும் ரூ.785 கோடியில் துளி துளி தண்ணீர் திட்டம் ரூ.56.72 கோடியில் எஸ்.சி./எஸ்.டி. விவசாயிகளுக்கு புதிய திட்டம் ரூ.17.70 கோடியில் வேளாண் காடுகள் திட்டம் ரூ.10 கோடியில் 43,500 தார்பாய்கள் வாங்கப்படும். ரூ.7.61 கோடியில் தமிழ்நாடு குறுதானிய இயக்கம் ரூ.7.35 கோடியில் காட்டுப்பன்றி சேத தடுப்பு திட்டம் 1 லட்சம் ஏக்கருக்கு பசுந்தாள் உரம், விதைகள் 57,000 டன் வெங்காய சேமிப்பு கிடங்குகள் 1,161 தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 500 பால் பண்ணைகள் அமைக்க 25% மானியம் 100 புதிய தோட்டக்கலை விற்பனை நிலையங்கள் தஞ்சையில் மாபெரும் வேளாண் இயந்திரங்கள் கண்காட்சி நடத்தப்படும். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க இருக்கிறோம். நிரந்தர பசுமைக்கு வேளாண் காடுகள் திட்டம் அமைக்கப்படும். முதல்-அமைச்சர் விஜய் கூறியது போல ‘நல்லதே நடக்கும்' என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/agriculture-budget-key-schemes-for-farmers




