சென்னை, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வினைதீர்க்கும் விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தடைகள் அனைத்தையும் தகர்த்து, வெற்றிப் பாதையை வகுத்துத் தரும் விக்னேஸ்வரனை வணங்கி தொடங்கும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் வெற்றி நிச்சயம் என்ற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு ஏற்ப, இத்திருநாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நிம்மதியும், வளமும் பன்மடங்கு பெருக விநாயகப் பெருமான் அருள் புரியட்டும். டிடிவி தினகரன் வாழ்த்து வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை வழங்கும் வேழமுகத்தோனை பக்தியுடன் வணங்கும் இந்த புனித நாளில், அவரது அருளால் மக்கள் அனைவரின் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி, ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கை மலரட்டும் எனக்கூறி மீண்டும் ஒருமுறை, உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது விநாயகர் சதூர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/vinayagar-chaturthi-festival-ttv-dhinakaran-extends-greetings




