கொச்சி, அதிகாரிகள் சோதனை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து கொச்சிக்கு வரும் விமானங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் தங்கம் கடத்தப்படுவதும், அதனை அதிகாரிகள் சோதனை மூலம் பறிமுதல் செய்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் வளைகுடா நாடான அபுதாபியில் இருந்து விமானம் ஒன்று நேற்று கொச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தம்பதியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை நடத்தினர். உள்ளாடைக்குள் மறைத்து அதில், போதைப்பொருளோ அல்லது தங்கமோ இல்லை. இதைத்தொடர்ந்து தம்பதியை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, அவர்கள் உள்ளாடைகளுக்குள் ரகசிய அறை அமைத்து, அதற்குள் பசை வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள 170 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் தமிழ்நாடு புதுக்கோட்டையை சேர்ந்த ரிப்னாஸ் ஹமீது (வயது 48), அவரது மனைவி ஜனாபர் காதர் (42) ஆகியோர் என்பதும், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்காமல் இருக்க தங்கத்தை பசை வடிவில் மாற்றி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக தம்பதியை சுங்கத்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் தங்கத்தை எங்கு கடத்தி செல்ல முயன்றனர்?, இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/tamil-nadu-couple-arrested-for-smuggling-rs-2-crore-gold-hidden-in-underwear




