காஞ்சிபுரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆகஸ்ட் மாதம் 17-ந்தேதி நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான மண்டல செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் அருள்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த முகாம், நகர, மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்கள், அணிப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய திருமாவளவன் கூறியதாவது:- தி.மு.க. தோற்றுவிட்டதே என்பது ஒரு கவலை, அதைவிட அ.தி.மு.க.வை கண்முன்னரே சிதைத்து வருகிறார்களே என்பது ஒரு கவலை, திராவிட கட்சிகளை ஒதுக்கி விட வேண்டும் என பெரியார் காலத்தில் இருந்து ஒரு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் பா.ஜ.க. மீது எந்த வெறுப்பும் கிடையாது, ஆனால் கருத்தியல் என்பது வேறு. பா.ஜ.க.வை கொள்கை எதிரி என த.வெ.க. கூறுகிறது. இவ்வளவு நாள்கள் எதிர்த்த தி.மு.க.வும் தொடர்ந்து எதிர்ப்பதாக கூறுகிறது. பா.ஜ.க.வை எதிர்ப்பதுதான் அரசியல் என இந்தியா கூட்டணியும் சொல்கிறது. அப்படியெனில், ஏன் இவர்கள் அனைவரும் ஒரே அணிக்குள் வரக்கூடாது என்றுதான் நான் கேட்கிறேன். த.வெ.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் ஒரே எதிரி பா.ஜ.க. தான். கேரளாவில் காங்கிரசும் இடதுசாரியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் காங்கிரசும் கருத்து வேறுபாடு இருந்தால் கூட இந்தியா கூட்டணி என்று வரும்போது ஒன்றாக நிற்கிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் அப்படி ஒரு அரசியல் இருக்கக் கூடாது? இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-shouldnt-the-trp-and-dmk-be-in-the-same-team-thirumavalavan-asks




