சென்னை, பயணிகளுக்கான கூடுதல் தேவையை கருத்தில் கொண்டு தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பகல் நேர சிறப்பு ரெயில் ”தாம்பரத்தில் இருந்து ஜூலை 30, ஆகஸ்டு 1, 6, 8, 13, 15 ஆகிய தேதிகளில், காலை 5 மணிக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06135) அன்று மாலை 3.30 மணிக்கு தென்காசியை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், தென்காசியில் இருந்து ஜூலை 31, ஆகஸ்டு 2, 7, 9, 14, 16 ஆகிய தேதிகளில், காலை 5 மணிக்கு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06136) அன்று மாலை 3.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். முன்பதிவு தொடக்கம் 23 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/attention-passengers-day-time-special-train-between-tambaram-tenkasi




