சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் கொடுத்த அறிவிப்புகள் CM Vijay தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.38 லிருந்து ரூ.41 ரூபாயாக கொள்முதல் விலை உயர்வு. வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வகையில் பெரம்பூரில் ரூ.300 கோடியில் 400 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களை உருவாகும் வகையில் அரசு மருத்துவமனைகளில் ரூ.351 கோடி மதிப்பில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவ காப்பீடு தொகை ஆண்டுக்கு 5 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தப்படும். திருநங்கையர்களுக்கான மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, தருமபுரி, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கபடும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/new-hospital-in-perambur-announcement-by-cm-vijay




