மதுரை, வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வே சார்பில் திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை, மதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06115) திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 29-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 5-ந் தேதி ஆகிய நாட்களில் இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.10 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் காலை 8.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத் தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.06116) வருகிற 30-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 6-ந் தேதி வேளாங்கண்ணியில் இருந்து இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.25 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந் 1 தடைகிறது. மறுநாள் காலை 7.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயிலில் 3 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட் டிருக்கும். ரெயில், நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட் டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-train-from-thiruvananthapuram-to-velankanni




