கொளத்தூர் தொகுதியின் 14 பூத்களின் EVM மெஷின்களை சரிபார்க்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. சோதனையின் முடிவில் மெஷின்களில் எந்த கோளாறும் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. EVM Verification கொளத்தூரில் 8795 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தோற்றிருந்தார். இதைத் தொடர்ந்து கொளத்தூரின் சில பூத்களில் திமுகவுக்கு சாதகமான வாக்காளர்கள் இருந்தும் குறைவான வாக்குகளே பதிவாகியிருப்பதாக மு.க.ஸ்டாலின் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் கொளத்தூரின் 14 பூத்களில் EVM மெஷின்களை சரிபார்க்கும் பணியை கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது. ஒரு நாளைக்கு 2 பூத்களின் மெஷின்களை சரிபார்க்கும் பணி நடந்தது. முதலில் ஏப்ரல் 23 ஆம் தேதி பதிவான வாக்குகளை சரிபார்த்துவிட்டு, பின்னர் ஒரு மாதிரி வாக்குப்பதிவு போல நடத்தி வாக்குகள் சரியாக விழுந்து பதிவாகிறதா என்பதை அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்பு சரிபார்ப்பர். இந்த செயல்முறை இன்று வரை நடந்திருந்தது. இடையில் திமுக சார்பில் இரண்டு பிரச்னைகள் எழுப்பப்பட்டது. விவிபாட் இயந்திரம் ஒன்று திடீரென பழுதானதை ஒரு புகாராக முன்வைத்தனர். பின்னர் இரண்டு மெஷின்களின் வெளிப்புறத்தில் சீரியல் நம்பர் இல்லை என்பதை புகாராக வைத்தனர். EVM Verification இந்த புகார்களை காரணம் காட்டி EVM சரிபார்க்கும் செயல்முறையிலிருந்து வெளியேறவும் செய்தனர். இதன் பிறகு தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் பழுதான மெஷின்களுக்கு பதிலாக வேறு பூத்களின் மெஷின்களை தேர்வு செய்து கொடுத்தனர். அந்த மெஷின்களும் சரிபார்க்கப்பட்டன. இறுதியில் கொளத்தூரின் EVM மெஷின்களில் எந்த கோளாறும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/no-fault-found-in-evms-stalins-kolathur-election-complaint-officially-closed




