சென்னை, சென்னையில் முதல் கட்டமாக இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில்களில் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்து வருகிறார்கள். தொடக்க காலத்தில் 10 ஆயிரம், 15 ஆயிரம், 50 ஆயிரம் என இருந்த பயணிகள் எண்ணிக்கை தற்போது 3 லட்சத்தை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு பிறகு படிப்படியாக மெட்ரோ ரெயில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. வேலைக்கு செல்லக்கூடிய ஊழியர்கள் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள். மெட்ரோ விமான நிலையத்திற்கு எளிதாக செல்ல முடிவதால் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பயன்பாடு அதிகரித்தது. இப்படி கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் ஒரு கோடியே 4 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர். தற்போது 45 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதிக நெரிசல் மிகுந்த நேரத்தில் 45 ரெயில்களும் இயக்கப்படுகின்றன. நெரிசல் இல்லாத நேரத்தில் 30 ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதிகாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை உள்ளது. மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு இணைப்பு போக்குவரத்து எளிதாக இருப்பதால் அதிகம் பயன்படுத்துகிறார்கள். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை பெருநகரத்தில் நெரிசல் இல்வாத சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வழங்கி வருகிறது. மெட்ரோ ரெயிலில் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூடுதல் ரெயில்களை இயக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டெண்டர் இதற்காக கூடுதலாக 28 ரெயில்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. 6 பெட்டிகளை கொண்டது ஒரு ரெயிலாகும். மொத்தம் 168 பெட்டிகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்படுகிறது. இந்த ரெயில் பெட்டிகள் வாங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அதற்கான பணிகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து வருகிறது. கூடுதலாக மெட்ரோ ரெயில் இயக்கப்படும் சூழ்நிலையில் தற்போதுள்ள கூட்ட நெரிசல் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/rising-passenger-numbers-on-chennai-metro-decision-to-purchase-28-new-trains




