மெல்போர்ன், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டார்வின் நகரில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலியா 198 ரன்களுக்கு ஆல் அவுட் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 71 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய வங்காளதேச வீரர் ஹசன் முகமது அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்காளதேசம் 351/6 இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் ஹசன் தமீம் அதிகபட்சமாக 101 ரன்கள் குவித்தார். தற்போதைய நிலவரப்படி வங்காளதேசம் 153 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் மெஹ்தி ஹசன் 32 ரன்னிலும், ஹசன் முகமது 13 ரன்னிலும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஹேசல்வுட் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/first-test-vs-australia-bangladesh-in-strong-position




