புதுடெல்லி, 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத்தில் நடக்க உள்ளநிலையில், அதற்கு அரியானா காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் சிங் ஹுடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பதக்கங்கள் அரியானாவிடம் இதுகுறித்து பேசிய தீபேந்தர் சிங் ஹுடா, "இந்தியாவுக்காக அதிக பதக்கங்களை வென்று தருவது அரியானா வீரர்கள்தான். ஆனால், சர்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்பு மட்டும் குஜராத்துக்கு வழங்கப்படுகிறது" என்று விமர்சித்தார். 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் 100-வது ஆண்டு தொடர் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் 2010-ம் ஆண்டு டெல்லிக்குப் பிறகு, காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுவது இதுவே இரண்டாவது முறையாகும். அரியானா வீரர்களின் பதக்கப் பங்களிப்பு 2026 காமன்வெல்த் போட்டிகள்: இந்தியா வென்ற 39 பதக்கங்களில் 10 பதக்கங்களை (13 தங்கங்களில் 7 தங்கம் உட்பட) அரியானா வீரர்கள் பெற்று தந்தனர். 2024 பாரிஸ் ஒலிம்பிக்: இந்தியா வென்ற 6 பதக்கங்களில், தனிநபர் பிரிவில் கிடைத்த 4 பதக்கங்களை அரியானா வீரர்கள் கைப்பற்றினர். 2023 ஆசிய போட்டிகள்: இந்தியாவின் 106 பதக்கங்களில் 33 பதக்கங்களில் அரியானா வீரர்கள் பங்களித்தனர். 2022 பர்மிங்காம் காமன்வெல்த்: இந்தியா வென்ற 61 பதக்கங்களில் 21 பதக்கங்கள் அரியானா வீரர்களால் பெறப்பட்டவை. 2021 டோக்கியோ ஒலிம்பிக்: இந்தியாவின் 6 தனிநபர் பதக்கங்களில் 3 பதக்கங்களை அரியானா வீரர்கள் வென்றனர். 2018 ஜகார்த்தா ஆசிய போட்டிகள்: இந்தியா வென்ற 70 பதக்கங்களில் 17 பதக்கங்களை அரியானா வீரர்கள் கைப்பற்றினர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/do-indias-medals-come-from-haryana-statistically-verifying-deepender-hoodas-claims




