அமெரிக்க அதிபர் Donald Trump, Google CEO சுந்தர் பிச்சையை“Monster” என்று குறிப்பிட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் Trump இந்த வார்த்தையை விமர்சனமாக அல்லாமல், அவரின் செல்வாக்கையும் திறமையையும் பாராட்டும் விதமாகவே பயன்படுத்தினார். White House-ல் AI சந்திப்பு! செப்டம்பர் 29-ம் தேதி White House-ல் AI துறையின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் Trump சந்திப்பு நடத்தினார். Google-ன் Sundar Pichai, Meta-வின் Mark Zuckerberg, Nvidia-வின் Jensen Huang, OpenAI-ன் Greg Brockman, Anthropic-ன் Dario Amodei உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்பத் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் AI-ன் பாதுகாப்பு, நிறுவனங்களின் பொறுப்பு மற்றும் AI வளர்ச்சிக்கான கட்டுப்பாடுகள் குறித்து பேசப்பட்டது. முன்னணி AI நிறுவனங்கள் தங்களது AI அமைப்புகளுக்கு உள்கட்டுப்பாடுகளை உருவாக்குவதுடன், independent auditors மூலம் அவற்றை மதிப்பாய்வு செய்யும் தன்னார்வ ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டன. “This guy is a monster!” சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய Trump, Pichai-ஐ சுட்டிக்காட்டி, “This guy is a monster, and nobody knows him” என்று கூறினார். சுந்தர் பிச்சையின் பெயர் மற்றும் அவருடைய மிகப்பெரிய தொழில்நுட்ப செல்வாக்கு குறித்து Trump தொடர்ந்து பாராட்டிப் பேசினார். COMEDIC GOLD OUTSIDE THE WHITE HOUSE! TRUMP: “Sundar [Pichai], you wanna say something?” PICHAI: “First of all, thanks—” TRUMP: “This guy is a MONSTER, and nobody knows him. What a great life! To be a MONSTER and not have to go through this. All you have to know… — Wiki Leaks 2 (@WikiLeaksQ2) September 29, 2026 Trump-ன் இந்த வித்தியாசமான பாராட்டைக் கேட்ட சுந்தர் பிச்சை சிரித்தபடி பதிலளித்தார். “Hopefully a better tagline than I’m a monster!” என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார். இந்தச் சிறிய உரையாடல்தான் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. ஒருபுறம் உலகின் முன்னணி AI நிறுவனங்கள் பாதுகாப்பு குறித்து விவாதித்துக் கொண்டிருக்க, மறுபுறம் Google CEO-வை Trump “Monster” என்று அழைத்த இந்த எதிர்பாராத தருணம் White House சந்திப்பின் வைரல் காட்சியாக மாறியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/this-guy-is-a-monster-says-trump-on-sundar-pichai




