சென்னை, தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாராந்திர 14 சிறப்பு ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கும் முக்கிய ரெயில் சேவைகள் குறித்த தகவல்கள் பின்வருமாறு;- தாம்பரத்தில் இருந்து போடிநாயக்கனூருக்குச் செல்லும் சிறப்பு விரைவு ரெயில் (எண்: 06059) வரும் செப்டம்பர் 12 முதல் 26 ஆம் தேதி வரையிலும், போடிநாயக்கனூர் தாம்பரம் இடையேயான வாராந்திர விரைவு ரெயில் (எண்: 06060) செப்டம்பர் 13 முதல் 27 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் கன்னியாகுமரி (வெள்ளிக்கிழமை) விரைவு ரெயில் (எண்: 06045) செப்டம்பர் 4 முதல் 25 ஆம் தேதி வரையிலும், கன்னியாகுமரி எழும்பூர் நிலையம் வரையிலான (ஞாயிற்றுக்கிழமை) விரைவு ரெயில் (எண்: 06046) செப்டம்பர் 6 முதல் 27 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மங்களூரு சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு ரெயில் (எண்: 06126) வரும் செப்டம்பர் முதல் 28 ஆம் தேதி வரையிலும், சென்னை எழும்பூர் மங்களூரு இடையிலான விரைவு ரெயில் (எண்: 06125) மற்றும் போத்தனூர் சென்னை சென்ட்ரல் இடையேயான விரைவு ரெயில் (எண்:06028) ஆகியவை செப்டம்பர் 8 முதல் 29 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மேட்டுப்பாளையம் விரைவு ரெயில் (எண்: 06030) செப்டம்பர் 6 முதல் 27 ஆம் தேதி வரையிலும், மேட்டுப்பாளையம் திருநெல்வேலி விரைவு ரெயில் (எண்: 06029) செப்டம்பர் 7 முதல் 28 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி தாம்பரம் விரைவு ரெயில் (எண்: 06166) செப்டம்பர் 6 முதல் 27 ஆம் தேதி வரையிலும், திருநெல்வேலி தாம்பரம் விரைவு ரெயில் (எண்: 06070) செப்டம்பர் 3 முதல் 24 ஆம் தேதி வரையிலும், தாம்பரம் திருநெல்வேலி விரைவு ரெயில் (எண்: 06069) செப்டம்பர் 4 முதல் 25 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/extension-of-14-special-train-services-to-southern-districts




