மதுரை, மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டம், கம்பூர் கிராம வழக்கு நிலை தொடர்பான காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- மதுரை மாவட்டம், மேலூர் உட்கோட்டம், கம்பூர் கிராமத்தில் தூய்மை காவலர் திருமதி சசிகலா என்பவர் ஊராட்சி செயலாளர் ரூபா என்பவர் மீது கொடுத்த புகாரின் பேரில், கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் குற்ற எண்: 355/2026-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், இது தொடர்பாக ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற போது மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும், மற்றொரு வழக்கு கொட்டாம்பட்டி காவல் நிலைய குற்ற எண்: 358/2026 -ன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இவ்வழக்கு ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவோ அல்லது முழுமையாக முடித்து வைக்கப்பட்டுவிட்டதாகவோ ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின்றன. இவ்வழக்குகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை; காவல் துறையினரால் சட்டப்படி புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/madurai-investigation-into-the-complaint-filed-by-a-sanitation-worker-is-ongoing-police-clarification




