தமிழகத்தில் தற்போதைய ஆட்சியில் குதிரை பேரமும், அதிகார துஷ்பிரயோகமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் பி. வில்சன், சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் ஆகியோருடன் இணைந்து ஆளுநரை நேரில் சந்தித்து தி.மு.க சார்பில் விரிவான புகார் மனு அளிக்கப்பட்டது. ஆளுநருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, "அரசுடன் எந்தவித தொடர்பும் இல்லாத ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இரு நபர்கள், அமைச்சர்களை விடவும் அதிக அதிகாரம் பெற்றவர்களாக அரசு உயர்மட்டக் கூட்டங்களிலும், அமைச்சரவைக் கூட்டங்களிலும் முதலமைச்சரின் முன்னிலையிலேயே அதிகாரிகளுக்கு உத்தரவிடும் கேவலமான நிலை தமிழகத்தில் நிலவுகிறது. முதல்வர் விஜய் இது குறித்து ஆளுநரிடம் முறையிட்டபோது, ‘அவர்கள் அந்த அளவுக்கு அவசியமாக கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்களை அமைச்சராக்கி இருக்க வேண்டியதுதானே?’ என்று ஆளுநரே சிரித்துக் கொண்டே கூறினார். இதன் மூலம் இந்த ஆட்சியில் நடப்பது தவறு என்பதை ஆளுநரே மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் அவதூறு வழக்குகளுக்காக யாரும் கைது செய்யப்பட்டது கிடையாது. கடந்த ஆட்சியில் என் மீது 16 வழக்குகளும், மு.க.ஸ்டாலின் மீது 40 வழக்குகளும் போடப்பட்டன, ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. அனிதா ராதாகிருஷ்ணனை 5 மணி நேரம் திருச்செந்தூரில் கைது செய்து தூத்துக்குடிக்குக் கொண்டு சென்று போலீஸார் துன்புறுத்தியுள்ளனர். ‘ஏன் இந்த கஷ்டம்? பேசாமல் தற்போதைய ஆளுங்கட்சிக்கு வந்துவிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்’ என்று போலீஸாரே அவரை மிரட்டி, கட்சி மாற வற்புறுத்தியுள்ளது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஆளுநர் அர்லேகர் - விஜய் நாகர்கோவில் தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டினைத் தொடர்புகொண்டு, கட்சி மாறினால் அவர் கேட்கும் முக்கிய அமைச்சர் பதவியைத் தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். அதேபோல், இளம் தி.மு.க எம்.எல்.ஏ சீனிவாசனை அணுகி, ‘தி.மு.க-வில் நீ ஒருவன் தான் இந்த பகுதியில் ஜெயித்துள்ளாய், நீயும் எங்களுடன் வந்துவிட்டால் தி.மு.க-வே இல்லாமல் போய்விடும்’ என்று கூறி ரூ. 50 கோடி பணமும், விரும்பும் வாரியப் பதவியும் தருவதாகப் பேரம் பேசியுள்ளனர். தற்போது கட்சி மாறியுள்ள விஜய் பாஸ்கர் என்பவர், ஓ.எஸ். மணியனிடமும் பேரம் பேசி வருவதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த ஆட்சியில் மக்கள் பணிகள் எதுவும் நடக்கவில்லை, ஆள் பிடிக்கும் வேலை மட்டுமே நடக்கிறது. 1952 முதல் தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுபோன்ற ஒரு மோசமான குதிரை பேர கலாச்சாரம் நடந்தது இல்லை என்பதை ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். அதைக் கேட்ட ஆளுநர், "இந்த சம்பவங்கள் மாநிலத்தின் மதிப்பையும் மரியாதையையும் கெடுக்கிறது" என்று வருத்தத்துடன் கூறி, உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். ஆர்.எஸ்.பாரதி பேச்சு ‘ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையில் தி.மு.க இன்றும் உறுதியாக இருக்கிறது. தற்போதைய ஆளுநர் அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தியதை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலில் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். எனினும், சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு முன் உரிய அதிகாரியிடம் புகார் அளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற நடைமுறைக்காகவே ஆளுநரிடம் இந்த மனுவை அளித்துள்ளோம்." என்றார். `ஆதவ் அர்ஜுனாவைக் கைதுசெய்வார்களா? இது சர்வாதிகாரத்தின் உச்சம்' - ஆர்.எஸ்.பாரதி காட்டம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/rs-bharati-has-severely-criticized-the-government-of-thaveka



