கர்நாடகத்தில் 4 ஆயிரம் பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நோய் பாதிப்பு உள்ளோர் முக கவசம் அணிய வேண்டும் என்றும், மக்கள் மற் றவர்களுடன் கை குலுக்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. பன்றி காய்ச்சல் பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை பரவலாக தற்போது பெய்து வருகிறது. இதன் காரணமாக பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தற்போது பன்றி காய்ச்சல் மக்களிடையே அதிக அளவில் பரவி வருகிறது. இது சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கடந்த 8 மாதங்களில் 4 ஆயிரத்து 125 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பில் 50 சதவீதம் பெங்களூருவில் பதிவாகியுள்ளது. அதாவது பெங்களூருவில் மட்டும் 2 ஆயிரத்து 33 பேர் இந்த பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருநகர பெங்களூரு ஆணைய எல்லையில் 2 ஆயிரத்து 33 பேர், பெங்களூரு நகரில் 982 பேர், மைசூருவில் 184 பேர், உடுப்பியில் 293 பேர், தட்சிண கன்னடாவில் 87 பேர், பல்லாரியில் 51 பேர், பெலகாவியில் 45 பேர், மண்டியாவில் 31 பேர், பெங்களூரு புறநக ரில் 26 பேர், ஹாவேரியில் 26 பேர். பெங்களூரு தெற்கு 26 பேர், சாம் ராஜ்நகரில் 20 பேர், சிவமொக்காவில் 91 பேர். உத்தரகன்னடாவில் 41 பேர், தாவணகெரேயில் 23 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். முககவசம் அணிய வேண்டும் இந்த நிலையில் பன்றி காய்ச்சல் பரவலை தடுக்க கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ள விவரங்கள் பின்வருமாறு:-பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்போர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். தவறாமல் முககவசம் அணிய வேண்டும். சோப்பு, சானிடைசர் மூலம் அவ்வப்போது கைகளை கழுவ வேண்டும். வெந்நீர் குடிக்க வேண்டும். மூக்கு, கண்ணில் கைகளை வைத்து துடைக்கக்கூ டாது. பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளோர் சுயமருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது. நோய் அறிகுறி இருந்தால் மற்றவர்களுடன் கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும். அதுபோல் நோய் பாதிப்பு இல்லாதோரும் யாருடனும் கைகுலுக்க வேண்டாம். அதை தவிர்க்க வேண்டும். கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக்கூடாது. கைக்குட்டையை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/swine-flu-spreading-rapidly-in-karnataka-4000-people-affected




