சென்னை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அவருடைய உதவியாளர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மற்றும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், என்னுடைய உதவியாளராக பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவெய்திய செய்தியால் மிகவும் மனம் வருந்தி நிற்கிறேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சென்னை மேயர் நான் சென்னை மேயராக பொறுப்பு வகித்தபோது, மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி, பின்னர் அந்த பொறுப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, என்னுடைய உதவியாளராக நெடுங்காலம் பணியாற்றியவர் அவர். என் உழைப்புக்கு உறுதுணையாக, காலநேரம் பாராது - கண் துஞ்சாது அவர் பணியாற்றிய காட்சிகளெல்லாம் நினைவலைகளாய் என்னுள் எழுந்து, நெஞ்சத்தை கனக்க செய்கின்றன; துயரை அதிகரிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த அவர், அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று நீடுதுயில் கொண்டுவிட்டார். பழகுதற்கினிய குணம் கொண்ட ஹரிகிருஷ்ணனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய ஆறுதலை உரித்தாக்குகிறேன் என தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/assistant-demise-condolence-by-dmk-chief-mk-stalin




