மேற்கு வங்க மாநிலம் பைகுந்தபூர் வனச்சரக பகுதிக்கு உட்பட்ட கஜோல்டோபா தடுப்பணைக்கு அருகில் ஐந்து யானைகள் கொண்ட ஒரு கூட்டம் ஆற்றைக் கடக்க முயன்றது. அப்போது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் யானை குட்டி ஒன்று தாயின் கட்டுப்பாட்டில் இருந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தண்ணீரில் தத்தளித்தபடி சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் வரை அந்தக் குட்டி யானை அடித்து செல்லப்பட்டுள்ளது. Elephant calf rescue சிறிய படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் சிலர் குட்டி யானை ஆற்றில் உயிருக்குப் போராடுவதைக் கவனித்துள்ளனர். தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சிறிய படகு மூலம் யானை குட்டியைப் பத்திரமாகப் பிடித்து படகில் ஏற்றியுள்ளனர். ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், 2 மீனவர்கள் மட்டும் சிறிய படகில் இருந்து கொண்டு குட்டியைப் பாதுகாத்துள்ளனர். மற்ற 3 மீனவர்களும் ஆற்றில் குதித்து படகைத் தள்ளியபடி பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்துள்ளனர். மீட்கப்பட்ட குட்டி யானை உடனடியாக கதம்பாரி வனச்சரக அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அதற்கு கால்நடை மருத்துவ உதவிகள் மற்றும் முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுவாக மனிதர்களின் நடமாட்டம் அல்லது தொடுதல் அதிகம் இருந்தால் தாய் யானைகள் மீட்கப்பட்ட குட்டிகளை மீண்டும் தங்களின் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ள தயக்கம் காட்டும் என்பதால், வனத்துறையினர் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளனர். Elephant calf rescue பிறந்த சில தினங்களில் தாயைப் பிரிந்த அந்தக் குட்டி யானை தொடர்ந்து பிளிறிக் கொண்டே இருந்ததால், வனத்துறையினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் ஆற்றின் தீவுப் பகுதியில் தாய் யானையைத் தேடியுள்ளனர். சுமார் இரண்டு மணி நேர தீவிரத் தேடலுக்குப் பிறகு ஆற்றங்கரை பகுதியில் குட்டியைத் தேடித் தவித்த தாய் யானையைக் கண்டறிந்துள்ளனர். பாதுகாப்பான தூரத்தில் குட்டி யானையை அவர்கள் கொண்டு விட்டதும் ஓடிவந்த தாய் யானை பாசத்துடன் தன் குட்டியை ஏற்றுக்கொண்டு உடனடியாக பால் புகட்டத் தொடங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட மரணத்தின் நுழைவு வாயில் இருந்த யானை குட்டியை மீட்ட மீனவர்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து பாராட்டைப் பெற்று வருகின்றனர். `கழுத்தில் மாட்டிய டிராக்டர் டயர்' - அசௌகரியத்துடன் திரிந்த காட்டு யானை; வனத்துறை நடவடிக்கை என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/environment/west-bengal-elephant-calf-struggling-in-river-fishermen-risk-their-lives-to-rescue-it




