சென்னை, சென்னை மண்டல திரைப்பட சென்சார் போர்டு அதிகாரியாக சஞ்சய் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச் சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்திய தகவல் சேவை பிரிவை (ஏ பிரிவு) சேர்ந்த மூத்த அதிகாரியான சஞ்சய் கோஷ், தற்போது சென்னை புத்தக வெளியீட்டு பிரிவின் (டி.பி.டி.) துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர், டெல்லி புத்தக வெளியீட்டு பிரிவின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (பி.ஐ.பி.) கூடுதல் பொறுப்பையும் வகித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது வகித்து வரும் பொறுப்புகளுடன் சேர்த்து, சென்னை மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் (சென்சார் போர்டு) மண்டல அதிகாரி பொறுப்பிலும் சஞ்சய் கோஷ் நியமனம் செய்யப்படுகிறார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/chennai-mandala-thiraippada-censor-boardu-adhigariyaga-sanjay-ghosh-niyamanam




