திருப்பூர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பானுமதியை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;- “அ.தி.மு.க. கரைந்து விடும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். கரைவதற்கு அ.தி.மு.க. என்ன சர்க்கரையா? அ.தி.மு.க. இரும்பு போன்றது. அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. எடப்பாடி தொகுதியில் விஜய் பிரசாரம் செய்திருந்தால் எடப்பாடி பழனிசாமி தோற்றுப் போயிருப்பார் என்று ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். எடப்பாடி தொகுதி எப்படிப்பட்ட தொகுதி என்பது மக்களுக்கு தெரியும். கூட்டணியில் இல்லாதபோதே 45 ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்ற தொகுதி. உங்கள் தலைவர் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவரா? தமிழகத்துக்கு தனி மாநில அந்தஸ்து வாங்கி கொடுத்தாரா? என்ன சாதனை செய்தார்? முதல்-அமைச்சர் விஜய் 70 படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், ஒரு தேசிய விருது கூட வாங்க முடியவில்லை. எங்களை அரசியலில் வீழ்த்த வேண்டும் என நினைத்தீர்கள் என்றால், நீங்கள்தான் களத்தில் காணாமல் போய்விடுவீர்கள்.” இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/what-achievements-has-chief-minister-vijay-made-he-hasnt-even-won-a-national-award-edappadi-palaniswami-attacks




