கர்நாடக அமைச்சர் டி.கே. சிவக்குமார், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கும் படி மத்திய நீர்பாசனத் துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீலை நேரில் சந்தித்து கடிதம் வழங்கியிருக்கிறார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், மேகதாது விவகாரத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பியிருப்பதாகவும், தமிழக எல்லைக்கு மிக அருகிலேயே, அதாவது மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த மேகதாது அணை அமையவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். டி.கே சிவக்குமார் இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கர்நாடக முதல்வரைப் பார்த்து பயமா. தனக்குத் தானே பட்டம் சூட்டி கொண்ட தாய் மாமா என்ன செய்யப் போகிறார்? மேகதாது அணை அமைய உள்ள இடத்தை மத்திய அரசின் நிபுணர் குழு நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளதாக கர்நாடகா முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. இதுகுறித்து இன்னமும் தமிழக அரசு சார்பில் எந்தச் செய்தியும் வரவில்லை. கர்நாடகத்துடன் தமிழக அரசு கூட்டு சேர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலுக்குத் துணை போகிறதா என்ற கேள்வி மக்களிடத்தில் எழுகிறது. "மேகதாது அணை தமிழகத்திற்கே உதவும்; உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காப்பாற்றுவேன்" - கர்நாடக முதல்வர் மேகதாது அணை கட்டுமான அனுமதி கேட்டு கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமார் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு. சி.ஆர் பாட்டீலைச் சந்தித்துப் பேசியிருப்பதும் சந்தேகத்தை உண்டாக்குகிறது. தமிழகம், புதுச்சேரி ஒப்புதல் இல்லாமல் புதிய அணையோ, நீர் தேக்கமோ கட்ட இயலாது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை முதல்வர் அறிவாரா? தண்ணீர் திறப்புக்கும் வாய் திறக்கவில்லை. முதல்வர் விஜய் அணை கட்ட தடுப்பதற்கு வாய் திறக்கவில்லை. கர்நாடக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசுக்கும் ரீல் முதல்வருக்கும் கடுமையான கண்டனம். உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார். மேகதாது: ``மேலும், மேலும் முன்னேறும் கர்நாடக அரசு. ஆனால், நாம்?" - அன்புமணி வலியுறுத்தல் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/admk-edappdi-palanisamy-slams-tvk-govt-for-mekedatu-issue




