சென்னை, கொளத்தூரில் தவெக வேட்பாளர் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கில் நாளை (செப்.03) தீர்ப்பளிக்கிறது சென்னை ஐகோர்ட்டு. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்றும் மீண்டும் சோதனை செய்ய வேண்டும் என்றும் திமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. தவெக எம்.எல் ஏ - வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும். தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு, நாளை காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/kolathur-constituency-election-case-verdict-tomorrow




