இந்திரன்ஸ் ஷேரிங்க்ஸ் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் மேடையில் நடிகர் இந்திரன்ஸ், "இது எனக்கு ஒரு கனவு மாதிரி இருக்கு. ஒரு 40 வருஷத்துக்கு முன்னாடி தமிழ்நாட்டுல ஒரு ஊசி, நூலோட டெய்லரா வந்தேன் இந்த மண்ணுக்கு. இப்போ என்னை ஒரு நடிகரா ஏத்துக்கிட்டு இருக்கீங்க. எனக்கு வாய்ப்பளித்த பாலாஜி சார், சூர்யா சார் எல்லாருக்கும் நன்றி. கருப்புசாமி கொடுத்த வரம்தான் இது!" என்று நெகிழ்ச்சியோடு கூறினார். இந்திரன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு பேச்சு சினிமா விருதுகள், 2025 மேடையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு 'அரசன்' திரைப்படம் குறித்து... "நேற்று இயக்குநர் வெற்றிமாறனிடம் பேசினேன். படத்தின் செய்திகளை இயக்குநர்தான் சொல்ல வேண்டும். ஆனால், 'அரசன்' வசூலில் ஈடு இணையே இல்லாத வகையில் சினிமா உலகை ஒரு உலுக்கு உலுக்கும். ஒவ்வொரு ஃபிரேமிலும் அதற்கான வேலைப்பாடு இருக்கிறது. ஈடு இணையில்லாத ஒரு வெற்றியை அந்தப் படம் பெறும்" என்று பேசினார். கலைப்புலி எஸ்.தாணு மீதா ரகுநாத் ஷேரிங்ஸ் 2025-ம் ஆண்டின் சினிமா விருதுகளில் 'சிறந்த குணச்சித்திர நடிகை' விருதை பெற்றிருக்கிறார் மீதா ரகுநாத் (3BHK). இவருக்கு இயக்குநர் சேரன் விருது வழங்கினார். விருது மேடையில் மீதா ரகுநாத், "நான் பண்ண மூணு படத்துக்குமே நான் நாமினேட் ஆகியிருந்தேன். `முதல் நீ முடிவும் நீ’, `குட் நைட்’டுக்கும் நாமினேட் ஆகியிருந்தேன். ஆனா, இப்போதான் ஃபர்ஸ்ட் டைம் எனக்கு விகடன் விருது கிடைச்சுருக்கு. நன்றி! நான் ஃபர்ஸ்ட் டைம் ஆடிஷன் பண்ணது 2018-ல. ஆனா என்னோட ஃபர்ஸ்ட் போட்டோ ரிலீஸானது 2022-ல. மீதா ரகுநாத் நமக்கு அவார்டு கிடைக்கிறப்போ, எல்லாரும் நம்ம வேலையை அங்கீகரிக்கிறப்போ வேலை செய்யறது ஓகே-தான். ஆனா, நம்ம வேலையை யாரும் பார்க்காதப்போ, அதை தாங்கிக்கிட்டு தொடர்ந்து வேலை செஞ்சுகிட்டே இருக்கறதுதான் ஒரு பெரிய விஷயம். நம்ம வேலைக்கு உண்மையா இருந்தா அதுக்கு ஒரு அங்கீகாரமும், ஒரு இடமும் கண்டிப்பா இருக்கும்னு இந்த அவார்டு காட்டியிருக்குன்னு நான் நம்புறேன். நன்றி. இது என்னை இன்னும் தொடர்ந்து ஓடவைக்கும்" என்று பேசினார். சேரன் ஸ்பீச் சினிமா விருதுகள், 2025-ல் இயக்குநர் சேரன், “விகடன் எப்பவுமே திறமைசாலிகளை மிஸ் பண்றது இல்லை. விகடன் விருது கொடுக்கறாங்கன்னா அவங்களுக்கு ஏதாவது ஒரு திறமை இருக்கும். விகடன்ல விருது அறிவிச்சாங்கன்னாலே அந்தப் படம், ஒரு முக்கியமான படம். அந்தப் படத்தில் ஒரு முக்கியமான உழைப்பு, எல்லா இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் அதுல இருக்குன்னு நாம புரிஞ்சுக்க முடியும். ஏன்னா, இப்பல்லாம் படத்தை வந்து தியேட்டர்ல பார்க்கிறதுக்கே கூட்டம் ரொம்ப குறைவா வர்றாங்க. அவ்வளவு போட்டி வந்துருச்சு. நிறைய OTT வந்துவிட்டது. இந்த விருது மூலமா திரும்ப அவங்க அந்தப் படங்களைப் பார்க்கறதுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு” என்றார். சேரன் 'South Icon Female' - கீர்த்தி சுரேஷ் விகடன் சினிமா விருதுகள் 2025 மேடையில், 'South Icon Female' விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றார். இந்த விருதை நடிகை ராதிகா வழங்கினார். விருதை வென்ற கீர்த்தி சுரேஷ், "நூறாண்டு விழாவைக் கொண்டாடும் விகடன் குழுமத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த ஆண்டில் எனது முதல் விகடன் விருதைப் பெறுவது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. ராதிகா மேடம் வெறும் 'கலையரசி' மட்டுமல்ல, அவர் 'கலையரக்கி.’ ராதிகா மேம்தான் என்னோட முதல் தயாரிப்பாளர். அவரிடமிருந்து இந்த விருதை வாங்குவது சந்தோஷமாக இருக்கிறது" எனக் கூறி, மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். பவுனுதாயி - ராதிகா ஷேரிங்ஸ் சினிமா விருதுகள், 2025-ல் கலந்துகொண்ட எவர்கிரீன் நாயகி ராதிகா 'தாய் கிழவி' திரைப்படம் குறித்து, "முதலில் பவுனுதாயி கதாபாத்திரத்தை என்னை நம்பி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியது என்னோட கணவர் சரத்குமார்தான். நான் முதல்ல, 'என்னால இந்தக் கிழவி வேடமெல்லாம் செய்ய முடியாது'ன்னு மறுத்தேன். ஆனா, அவர்தான் கதையைக் கேட்டுட்டு, என்னை இந்தக் கதாபாத்திரத்துல நடிப்பதற்கு சம்மதிக்க வெச்சாரு" என்று பகிர்ந்தார். சரத்குமார் - ராதிகா இயக்குநர் தினகரன் சிவலிங்கம் பேச்சு... சினிமா விருதுகள், 2025-ல் சிறந்த கதைக்கான விருதை பெற்ற இயக்குநர் தினகரன் சிவலிங்கத்தின் பேச்சு... "என்னுடைய நண்பரின் நண்பர் ஒரு நிகழ்வை என்னிடம் கூறினார். அவனுடைய அப்பா குடிக்கு அடிமையானவர். அந்தப் பையன் கஷ்டப்பட்டு படித்து, முன்னேறிவிட்டான். நல்ல வேலையில் இருக்கிறான். ஆனால், அவன் அப்பா வாங்கிவைத்த கடன் இவன் தலையில் விடிகிறது. சசி - தினகரன் அதைத் தாங்க முடியாமல் அந்தப் பையன் தற்கொலை செய்துகொள்கிறான். அவனுடைய இறப்பிலும் அப்பா குடித்தார். அவனின் உயரம் தெரியாமல் சவப்பெட்டியிலும் குழப்பம் விளைவித்தார். இப்போதும் அவர் குடித்துக்கொண்டேயிருக்கிறார். இப்படி பாதிக்கப்பட்ட சம்பவங்களால்தான் கதையை எழுதினேன். கொள்கை வகுக்கும் இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் பொறுப்போடு சில விஷயங்களை அணுக வேண்டும். சமூகரீதியான பிரச்னைகள் எப்படிச் சமூகத்துக்குச் சிதைவை ஏற்படுத்துகின்றனவோ, அதே மாதிரிதான் குடியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் மனச்சிதைவு ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகள் கூடுதல் பொறுப்போடு செயல்பட வேண்டும்". இவருக்கு இயக்குநர் சசி விருதை வழங்கினார். `வில்லனாக அறிமுகமாகி, சிறந்த வில்லனுக்கான விருதைப் பெற்றிருப்பது பெருமகிழ்ச்சி!' - நடிகர் சரத்குமார் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில், சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை, நடிகர் சரத்குமார் பெற்றார். அப்போது விழா மேடையில் பேசியவர், ``மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி, மீண்டும் ஒரு சிறந்த வில்லனுக்கான விருதைப் பெற்றிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய டிஜிட்டல் உலகில், ஓர் அச்சு ஊடகத்தை (Print Media) தொடர்ந்து நடத்துவது சாதாரணமான விஷயம் அல்ல. நான் ஓர் அச்சு ஊடகத்தை நடத்தி, அதில் 10 கோடி ரூபாய் வரை நஷ்டத்தைச் சந்தித்தவன் என்பதால், அதன் கஷ்டம் எனக்கு நன்றாகத் தெரியும். இந்த நேரத்துல கேப்டன் விஜயகாந்த்துக்கு நன்றி சொல்லியாக வேண்டும். 'புலன் விசாரணை' படத்துக்காக ஆள் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது என்னுடைய உதவியாளர் விஜயகாந்த்திடம் சென்று என்னைப் பற்றிச் சொன்னார். `இவர் மீசை இல்லாமல் இருந்தால் எப்படி இருப்பார்?’ எனக் கேட்டார். உடனே போய் ஷேவ் செய்துவிட்டு வந்து நின்றேன். ஓகே ஆகிவிட்டது. அந்தப் படத்தில் நடித்தேன். கேப்டன் விஜயகாந்துக்கு மிக்க நன்றி’’ என்றார். ஹர்ஷத் கான் ஷேரிங் ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025-ல் 'சிறந்த நகைச்சுவை நடிகர்' விருதை, நடிகர் ஹர்ஷத் கான் பெற்றார். விருது பெற்ற பிறகு, ஹர்ஷத் கானின் ஷேரிங்... "விகடன் விருது வாங்குவேன்னு விளையாட்டாக்கூட நினைச்சுப் பார்க்கலை. அங்கருந்து பார்க்கிறதைவிட இங்க வந்து இந்த விருதை வாங்கும்போதுதான் இதோட வெயிட் என்னன்னு புரியுது." ஹர்ஷத் கான் `மீசைய முறுக்கு 2’ பட அப்டேட்! சினிமா விருதுகள், 2025-ல் இசையமைப்பாளர், நடிகர் ஹிப்ஹாப் ஆதி `மீசைய முறுக்கு 2’ குறித்து, கொடுத்த அப்டேட்... `` `மீசைய முறுக்கு 2’ ஆகஸ்ட், செப்டம்பர்ல வந்துரும்னு நினைக்கிறேன். `மீசைய முறுக்கு 2’ படம் மியூசிக்கல். அதனால, இதுல நிறைய பாட்டு இருக்கு. முதல் படத்துல வந்த அதே உலகத்துலதான் இந்தப் படமும் நடக்குது. அதே உண்மையான கதாபாத்திரங்கள் நிறைய இருக்கு படத்துல.’’ ஹர்ஷத் கான் - ஹிப் ஹாப் ஆதி சிறந்த வசனம் - ஶ்ரீகணேஷ் (3BHK) 2025-ம் ஆண்டின் சினிமா விருதுகள் 'சிறந்த வசன'த்துக்கான விருதை '3BHK' திரைப்படத்துக்காகத் தட்டிச் சென்றிருக்கிறார் ஶ்ரீகணேஷ். இவருக்கு விருதை வழங்கியவர் எவர்கிரீன் நாயகி அம்பிகா. விருது பெற்ற பிறகு ஶ்ரீகணேஷ், "நான் எழுத்தைக் கத்துக்கிட்டதும், பல எழுத்தாளர்களின் பெயர்களைத் தெரிஞ்சுக்கிட்டதும், சினிமாவை ஆழமாகப் புரிஞ்சுக்கிட்டதும் விகடன் இதழ்கள் மூலமாகத்தான். இனி எழுதும்போது விகடன் கவனிச்சுட்டு இருக்குங்கற நினைவோடு இன்னும் தைரியமா எழுதுவேன். 2006-ல ஸ்கூல்ல படிக்கும்போது சாதாரண, வறுமையான குடும்பத்துலருந்து வந்த எனக்கு, வீட்டுல டி.வி-கூட அப்போ இல்லை... ஊர் பொது நூலகத்துலதான் விகடனை வாசிச்சு சினிமா கனவை வளர்த்துகிட்டேன்" என்று பேசினார். ஶ்ரீகணேஷ் இனிதே தொடங்கியது! 'திறமைக்கு மரியாதை'ஆனந்த விகடன் சினிமா விருதுகள், 2025 இனிதே தொடங்கியது. ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 அம்பிகா க்ளிக்ஸ் இன்னும் சில நிமிடங்களில் சினிமா விருதுகள், 2025 தொடங்கவிருக்கிறது. விருது விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகை அம்பிகா வருகை. நடிகை அம்பிகாநடிகை அம்பிகாநடிகை அம்பிகாநடிகை அம்பிகா யார் யார் வெற்றியாளர்கள்? சினிமா விருதுகள், 2025-ல் இன்று யார் யார் கைகளுக்கு விருதாக விகடன் தாத்தா செல்லவிருக்கிறார் என்பதை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள். ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025 'திறமைக்கு மரியாதை' நாள் இன்று. கதை தொடங்கி இயக்கம், நடிப்பு என தமிழ் திரைப்படத் துறையில் உள்ள அத்தனை பிரிவுகளிலும் 2025-ம் ஆண்டு கலக்கிய, மக்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த கலைஞர்களுக்கு பிரமாண்ட மேடையும், உரிய அங்கீகாரமும் கொடுக்கும் நாள் இன்று. ஆம்... இன்று ஆனந்த விகடன் 'சினிமா விருதுகள் 2025' நடைபெற உள்ளது. சென்னை கலைவாணர் அரங்கில் சுமார் 5 மணி அளவில் இந்த விழா சிறப்பாகத் தொடங்க உள்ளது. இந்த விழாவில் நடக்கும் அனைத்து குட்டி குட்டி அழகிய தருணங்களையும், வெற்றிப் பேச்சுகளையும் இந்த Live Blog-ல் இணைந்திருந்து உடனுக்குடன் நீங்கள் எங்களுடன் தெரிந்துகொள்ளுங்கள். இனிதே இணைந்திருப்போம் மக்களே! சினிமா விருதுகள் 2025 - திறமைக்கு மரியாதை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/editorial/events/ananda-vikatan-cinema-awards-2025-live-blog




