தஞ்சாவூரில், போதை மாத்திரை விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, போதை தடுப்புப் பிரிவு போலீசார் கீழவாசல் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, கீழவாசல், வண்ணாரத்துறையைச் சேர்ந்த பிரபல ரெளவுடி பிரகாஷ்(26) (எ) மாடு பிரகாஷிடம் அதிகளவில் போதை மாத்திரைகள் இருந்துள்ளன. இதையடுத்து அவரைப் பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். போதை மாத்திரை விசாரணையில் அவரது நண்பர்களான கீழவாசல், சின்னையபிள்ளை தெருவைச் சேர்ந்த முகமது அப்பாஸ்(25), சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த சுபாஷ்(24), மற்றும் அன்னப்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் சம்பத்(23) ஆகியோரிடம், 6,000 டாபென்டாடால் என்கிற போதை மாத்திரைக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, பிரகாஷ், அப்பாஸ், சுபாஷ், சஞ்சய் சம்பத் ஆகிய நான்கு பேரையும் கிழக்கு போலீஸில் ஒப்படைத்தனர். மேலும் நான்கு பேர் மீதும் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6,000 போதை மாத்திரைகள், ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த போதை மாத்திரையின் மதிப்பு சுமார் ரூ.60,000 என்கிறார்கள். திருச்சி பீமநகர் வேணுகோபால சுவாமி திருக்கோயில்: பிரச்னைகள் தீர்க்கும் ரோகிணி நட்சத்திர வழிபாடு! தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது அப்பாஸ், நாக்பூரில் உள்ள சாய் டிரேடிங் என்ற கம்பெனி ஒன்றில் இருந்து மாத்திரைகளை, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து, அந்த மாத்திரைகளை பார்சல் மூலம் பெற்று, நண்பர்களுடன் இணைந்து கல்லுாரி, பள்ளி மாணவர்களைக் குறித்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இது குறித்து போதை பொருள் தடுப்பு போலீசார் கூறியதாவது: தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(29), இவரது நண்பரான திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(24) இருவரும் சேர்ந்து போதை மாத்திரைகளை நாக்பூர் நிறுவனத்தில் வாங்கியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் இதில், ரஞ்சித்குமார் திருவையாறு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கிக்கொண்டு, போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்றுள்ளார். இதற்காக சதீஷ்குமாரையும் வரவழைத்து இருந்தார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி இருவரிடமும் இருந்து ஆயிரம் மாத்திரைகளைப் பறிமுதல் செய்ததுடன் அவர்களையும் கைது செய்து மரூர் போலீஸில் ஒப்படைத்தோம். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், முகமது அப்பாஸ், பிரகாஷ் ஆகியோர் போதை மாத்திரைகளை ஆன்லைனில் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். திருச்சி: கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; வீட்டின் முன் குவிந்த திமுகவினர் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/sale-of-narcotic-pills-targeting-students-6000-pills-seized-4-arrested



