திருப்பூர், ஓணம் பண்டிகையை முன்னிட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சார்ல பள்ளி-கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, சார்லபள்ளி-கோட்டயம் (வண்டி எண்.07197) வாராந்திர சிறப்பு ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை (3 சேவைகள்) ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.15 மணிக்கு சார்லபள்ளியில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமைகளில் மதியம் 12.25 மணிக்கு கோட்ட யத்தை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு திங்கட்கிழமைகளில் நள்ளிரவு 2.25 மணிக்கு வந்து 2.30 மணிக்கு புறப்படும். கோட்டயம்-சார்ல பள்ளி (07198) வாராந்திர சிறப்பு ரெயில் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை (3 சேவைகள்) திங்கட்கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் நள்ளி ரவு 12.30 மணிக்கு சார்லபள்ளியை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூ ருக்கு திங்கட்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு வந்து 11.55 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/onam-festival-special-train-between-charlapalli-and-kottayam




