நியூமெக்சிகோ, மெட்டா நிறுவனத்துக்கு ரூ.5,400 கோடி அபராதம் விதித்து அமெரிக்கா கோர்ட்டு பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக ஊட கங்களின் தாய் நிறுவனமான மெட்டா மீது அந்த செயலிகளால் குழந்தைகளின் மனநலம் பாதிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை மூடி மறைத்தது தொடர்பாக அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாண கோர்ட்டில் வழக்கு தொட ரப்பட்டது. நியூமெக்சிகோ கோர்ட்டு இந்த வழக்கில் முதல் கட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 375 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3,574 கோடி) மெட்டா நிறுவனத்திற்கு அபராதத்தை நியூமெக்சிகோ கோர்ட்டு விதித்திருந்தது. இந்த நிலையில் இவ்வழக்கின் 2-ம் கட்ட தீர்ப்பை நியூமெக்சிகோ கோர்ட்டு அளித்தது. அதில் தனது சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு இழப்பீடாக 567 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.5,408 கோடி) மெட்டா நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்தத் தொகையில் 420 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4 - ஆயிரம் கோடி) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சை சேவைகளுக்குப்பயன்படுத்தப்படும் என்று நீதிபதி பிரையன் பீட்ஷைட் தெரிவித்தார். மீதமுள்ள தொகை விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பரிசோதனை சேவைகள் மற்றும் அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படும் பிற செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக மெட்டா தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/us-court-orders-meta-to-pay-567-million-to-address-childrens-mental-health




