தூத்துக்குடி, ஏரல் அருகே உள்ள இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடைவிழா நாளை நடைபெறுகிறது. கொடை விழாவிற்கு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கால்நாட்டப்பட்டது. நேற்று மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை கோவை தொழிலதிபர் அஜித்ராஜ், அவரது மனைவி மகேஸ்வரி மற்றும் குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சேலை மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டன. இன்று மாலை 6 மணிக்கு சுமங்கலி பூஜையும், அதை தொடர்ந்து 9 மணிக்கு நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கொடைவிழா நாளை செவ்வாய்கிழமை கொடைவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து புனித நீர் தீர்த்தம் எடுத்து வருதல், அதை தொடர்ந்து கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், யாகபூஜை, மகாலட்சுமி பூஜையைத் தொடர்ந்து, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம், கலச பூஜை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீரால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பகல் 12.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு மதிய பூஜை நடைபெறுகிறது. மாலை 7 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நவீன வில்லிசை, நையாண்டி மேளம், கரகாட்டம், முளைப்பாரி கும்மிபாட்டு நடைபெறுகிறது. சாமக்கொடை இரவு 12.20 மணிக்கு முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் பூஜைகளும் இரவு 2.30 மணிக்கு சாமக்கொடையும் நடைபெறுகிறது. பின்னர் சப்பரத்தில் உற்சவர் முத்தாரம்மன் வாண வேடிக்கையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அப்போது பக்தர்கள் தேங்காய் பழம் படைத்து அம்மனை வழிபடுவார்கள். கொடைவிழா நாட்களில் காலை, மாலை, இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு மதிய கொடையும். இரவு 7 மணிக்கு பல்சுவை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அக்டோபர் 1ம் தேதி இந்து சமய பண்பாட்டு வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சி நடைபெறும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/mutharamman-temple-festival-near-eral-thiruvilakku-puja




