சென்னை, பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் என்ன, அவருடைய அப்பாவாக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன் என்று தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு விமர்சித்துள்ளார். தவெக பொதுக்கூட்டம் சென்னை மாவட்டம் பெரம்பூரில் நேற்று நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு கலந்துக்கொண்டார். அதில் அவர் கூறியதாவது:- சொல்வது மட்டுமல்ல சொல்லாததும் செய்வது நமது முதல்- அமைச்சர் விஜய் தான். தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்வதற்கு 5 நிமிடம் தான் குளத்தூர் பொதுக்கூட்டத்திற்கு வந்தார். இந்த கூட்டத்தில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் கூடிவிட்டனர். அப்போதே வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என முடிவு செய்து விட்டேன். யாரா இருந்தால் என்ன ஸ்டாலினா இருந்தா என்ன அவருடைய அப்பாவாகவே (கலைஞர் மு. கருணாநிதி) இருந்தாலும் நான் தோற்கடித்திருப்பேன் என கூறினார். மேலும், 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை பல்வேறு கட்சிகளில் இருந்துள்ளேன் அன்பு சகோதரர் மரிய வில்சன் போல் ஒரு நிதி அமைச்சரை எங்கும் பார்த்ததில்லை. தமிழகத்தில் இனி எந்த கட்சிகளும் தேரவே தேராது. இனிமேல் திமுகவும் கிடையாது, அதிமுகவும் கிடையாது ஒரே கட்சி தான் அது தவெக தான். முதல் - அமைச்சர் பேசாமல் இருந்தால் பேசுங்கள் என்கின்றனர் பேசினால் எழுந்து ஓடுகிறார்கள். தற்போதைய எதிர்க்கட்சிகளுக்கு ஒன்றுமே தெரியவில்லை. பேசாமல் கட்சியை ராஜினாமா செய்து விட்டு சென்று விடலாம். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/even-if-i-were-an-artist-i-would-have-defeated-him-thaveka-mla-vs-babus-criticism




