புனே, சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் புதிய புரட்சியாக, இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் 'இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்' (Indane XtraLite Now) என்ற புதிய 10 கிலோ கலவை சமையல் சிலிண்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் அறிமுக விழா புனேயில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. தலைவர் தொடங்கி வைத்தார் இந்த விழாவில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (IOCL) தலைவர் ஏ.எஸ்.சாஹ்னே கலந்து கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு புதிய 'எக்ஸ்ட்ராலைட் நவ்' சிலிண்டர்களை வழங்கி, இந்த அதிநவீன சேவையை முறைப்படி தொடங்கி வைத்தார். அப்போது நிறுவனத்தின் இயக்குனர் சவுமித்ரா பி. ஸ்ரீவஸ்தவா பேசியதாவது:- கேஸ் சேவையில் புதிய மாற்றம் "வாடிக்கையாளர்களின் வசதிக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 'இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ்' சிலிண்டர், வீட்டு சமையல் கியாஸ் சேவையில் ஒரு புதிய மாற்றத்தையும், மிக முக்கியமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் பைபர் கலவையால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலிண்டர் எடை குறைவாக இருப்பதால் கையாள்வதற்கு மிகவும் எளிதானது. கோவையில் விற்பனை தொடக்கம் இந்த சிலிண்டர் சேவை முதற்கட்டமாக தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களான புனே, குருகிராம், இந்தூர் ஆகிய 4 நகரங்களில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகிற ஆகஸ்டு மாத மத்தியிலிருந்து மேலும் 25 நகரங்களுக்கும் இந்த சேவை கொண்டு செல்லப்படும். பின்னர், வருகிற அக்டோபர் மாத இறுதிக்குள் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இந்த புதிய சிலிண்டர் சேவை முழுமையாக விரிவுபடுத்தப்படும். 4 மணி நேரத்திற்குள் வினியோகம் வாடிக்கையாளர்கள் இந்தியன் ஆயில் ஒன் செயலி மற்றும் இந்தியன் ஆயில் வாடிக்கையாளர் இணையதளம் மூலம் புதிய இணைப்புகளைப் பெறவும், சிலிண்டரை முன்பதிவு செய்யவும் முடியும். விரைவில் 7588888824 என்ற வாட்ஸ்அப் எண்ணின் மூலமும் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்படும். இண்டேன் வினியோகஸ்தர் வலையமைப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியன் ஆயில் சில் லரை விற்பனை நிலையங்கள் மூலமாக இந்த சேவை வழங்கப்படும்" என்றார். விழாவில் 5 கிலோ இண்டேன் சோட்டு சிலிண்டர் முன்பதிவு செய்த 4 மணி நேரத்திற்குள் வினியோகம் செய்யும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. விழாவில் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/indane-xtralite-now-10kg-cooking-gas-cylinder-india-launch




