சென்னை, மருத்துவப் படிப்புக்கான நேற்று நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில், விளையாட்டு பிரிவில் மருத்துவப் படிப்பை தேர்வு செய்து சேலத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் சாதித்திருக்கின்றனர். சேலத்தை சேர்ந்த இரட்டையர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் தன்னுடைய இரட்டை பிள்ளைகளான நிகில் ஸ்ரீராம், நிக்ஷிதா ஆகிய 2 பேரையும் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு சென்னை அழைத்து வந்திருந்தார். இவர்கள் இருவரும் “வுஷூ" என்ற தற்காப்பு கலை விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்கி சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று அதன் மூலம் விளையாட்டு பிரிவில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். மருத்துவப் படிப்பு கலந்தாய்வு நிகில்ஸ்ரீராம் நீட் தேர்வில் 240 மதிப்பெண்ணும், நிக்ஷிதா 370 மதிப்பெண்ணும் விளையாட்டுக்கு மத்தியில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தனர். அந்த மதிப்பெண் அடிப்படையிலும், விளையாட்டு பிரிவின் அடிப்படையிலும் நிகில் ஸ்ரீராமுக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியிலும். நிக்ஷிதாவுக்கு சேலம் மருத்துவக் கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன. சிறுவயது முதல் சேர்ந்தே சாதித்த இரட்டையர்கள் நிகில் ஸ்ரீராமும், நிக்ஷிதாவும் பள்ளிப் படிப்பில் இருந்து தொடர்ந்து ஒன்றாகவே பயணித்து வருகின்றனர். ஒரே வகுப்பறையில் ஒரே பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்தவர்கள், விளையாட்டிலும் ஒரே விளையாட்டையே தேர்வு செய்து அதில் சாதித்து, அதன் வாயிலாக இப்போது மருத்துவப் படிப்பு ஆசையையும் நிறைவேற்றியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது. 'எங்கள் குடும்பத்தில் பலர் மருத்துவத்துறையில் பயணிக்கிறார்கள். எங்களுடைய தந்தை மருந்துகள் மொத்த விற்பனையாளராக உள்ளார். அந்த வகையில் நாங்களும் மருத்துவத் துறையில் காலடி வைக்க முயற்சித்தோம். அதை சாதித்து விட்டோம்' என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/from-school-to-medical-school-twins-who-have-been-achieving-together-since-childhood



