லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்திருக்கிறார். AK - Vijay முதலீடுகளை ஈர்க்க லண்டனுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் விஜய், இன்று லண்டன் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டுக்கு வருகை தந்திருந்தார். அங்கே நடிகர் அஜித் கலந்துகொள்ளும் கார் ரேஸ் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ரேஸ் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே முதல்வர் விஜய் மைதானத்துக்கு வந்துவிட்டார். ரேஸூக்கு தயாராகிக் கொண்டிருந்த அஜித்தை சந்தித்து வாழ்த்துக் கூறி நலம் விசாரித்த விஜய், அஜித்தோடு இணைந்து கூடியிருந்த ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார். அஜித் விஜய்க்கு தன்னுடைய காரை பற்றியும் ரேஸை பற்றியும் விளக்கிக் கூறினார். அஜித்துடன் விஜய் உரையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ஓடத் தொடங்கியது. Vijay ரேஸூக்கான நேரம் நெருங்கவே அஜித் தனது காரில் ஏறி டிராக்குக்கு சென்றார். காரில் தயாராக இருந்த அஜித்தை வாழ்த்தி ஆல் தி பெஸ்ட் சொன்ன விஜய், அஜித்தின் காருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து கொடியசைத்து வைத்து ரேஸையும் தொடங்கி வைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/vijay-flags-off-ajiths-racing-event-all-the-best-friend-ajith-races-ahead




