விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள சின்னக்கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைப்பாண்டி என்பவருக்கும் சுவாதி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 3 வயதில் விஷ்ணுபிரியா என்ற பெண் குழந்தை இருந்தது. சுவாதி, பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிந்த போது தன்னுடன் வேலை பார்த்த விக்னேஸ்வரன் என்ற இளைஞருடம் பழக்கம் ஏற்பட்டு அது திருமணம் மீறிய உறவாக மாறியுள்ளது. கைது செய்யப்பட்ட விக்னேஷ்வரன் இதையடுத்து தனது கணவர் துரைப்பாண்டியனுடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த சுவாதி தனது குழந்தை விஷ்ணு பிரியாவுடன், விக்னேஸ்வரனோடு சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பசும்பொன்நகரில் தனியாக வாடகை வீட்டில் கடந்த 25 நாட்களாக வசித்து வந்துள்ளனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான விக்னேஸ்வரன், தினமும் மது அருந்திவிட்டு சுவாதியுடன் பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுறது. இருவருக்குள் ஏற்பட்ட தகராறால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரன், சுவாதியின் 3 வயது பெண் குழந்தை விஷ்ணு பிரியாவின் தலைமுடியை பிடுங்கியும், முகத்தை நகத்தால் கீறியும், வயிற்றில் தாக்கியும் கொடூரமான முறையில் குழந்தையை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், குழந்தை விஷ்ணுபிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. தகவலறிந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸார் குழந்தை விஷ்ணு பிரியாவின் உடலைக் கைப்பற்றி உடற் கூராய்விற்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூராய்விற்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தையின் உடல் இக்கொலை சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விக்னேஸ்வரனை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது திருமண உறவிற்கு மூன்று வயது பெண் குழந்தை இடையூறாக இருந்ததால் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ள போலீஸார், அக்குழந்தையின் தாய் சுவாதியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/crime/person-arrested-in-sivakasi-for-killing-3-year-old-girl-due-to-extramarital-affair




