சென்னை, ஜூலை 21 முதல் நாடாளுமன்றப் பக்கமே வராமல் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமறைவாக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தலைமறைவாக இருக்கும் அமித்ஷா 'குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்' என்பதற்கேற்ப! இன்று நாடாளுமன்றத்தில், அரசால் அவசர மற்றும் முக்கியத்துவம் கருதி கொண்டுவரப்பட்ட Supplementary List of Business பட்டியலில், உள்துறை மந்திரி அமித்ஷாவின் பெயரில் இரண்டு முக்கிய மசோதாக்கள் The Kerala (Alteration of Name) Bill, 2026 மற்றும் The National Co-operative Development Corporation (Amendment) Bill, 2026, அறிமுகத்திற்காகப் பட்டியலிடப்பட்டிருந்தன. ஜூலை 21 முதல் நாடாளுமன்றப் பக்கமே வராமல் தலைமறைவாக இருக்கும் அவர், தன் பெயரிலேயே மசோதாக்கள் பட்டியலிடப்பட்டிருந்தும் அவைக்கே வராமல் இணை மந்திரிகளைக் கொண்டு அவற்றை நகர்த்த வைக்கிறார். இது மக்களுக்குத் தெரியாமல் இல்லை! ஏன் இந்த பயம்? திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பிறகும் அமித் ஷாவுக்கு ஏன் இந்த பயம்? லோக்சபாவிற்கு வந்து கேள்விகளை எதிர்கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம்? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-is-amit-shah-so-hesitant-to-face-questions-manickam-tagore




