வாஷிங்டன், 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூ யார்க் நகரில் நடந்து வந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் பிரெஞ்சு ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவ ருமான ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள பென் ஷெல்டனை (அமெரிக்கா) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் அதிவேகமாக 'செர்வ்' செய்து அசத்திய ஸ்வரேவ் 6-3, 7-6 (7-2), 5-7, 6-2 என்ற செட் கணக்கில் பெல் ஷெல்டனை தோற்கடித்து முதல்முறையாக அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பரிசளிப்பு விழாவின் போது அலெக்சாண்டர் ஸ்வெரேவ் பேசுகையில், 'எனக்கு 4 வயது இருக்கும் போது நீரிழிவு நோய் இருப்பதை கண்டறிந்த டாக்டர்கள் விளையாட்டில் தீவிரமாக செயல்படுவது சாத் தியமில்லை என்று கூறினர். ஆனால் எனது அம்மா அவன் விரும்பியதை அடைவான். அவன் ஒரு டென்னிஸ் வீரராக விரும்பினால், டென்னிஸ் வீரராக இருப்பான். அவன் வேறு ஏதாவது செய்ய விரும் பினால், அதனை செய்வான். ஆனால் இந்த நோய் அவனது செயல்பாடுகளை வரையறுக்காது' என்று தைரியமாக கூறினார். அத்துடன் நான் விரும்பியதை செய்யுமாறு என்னை எல்லா வகையிலும் ஊக்கப்படுத்தினார்.அவர் தான் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர். அவரே எனது இந்த முன்னேற்றத்துக்கு முதற்காரணம்' என்று நெகிழ்ந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/tennis/affected-by-diabetes-at-age-4-zverev-opens-up-emotionally




