டெல்லி, இந்திய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்தியா வெளிநாட்டு அணியாக களமிறங்குகிறது. முதல்முறை கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவையே தனது 'ஹோம் வென்யூ'வாக ஆப்கானிஸ்தான் அணி பயன்படுத்தி வருகிறது. இதற்கு முன்பு லக்னோ, டேராடூன், நொய்டா உள்ளிட்ட நகரங்களில் சொந்த மண்ணில் விளையாடும் அணியாக பல போட்டிகளில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக விளையாடியது கிடையாது. தற்போது முதல்முறையாக இந்தியாவுக்கு எதிராக களமிறங்குகிறது. அருண் ஜெட்லி இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. டி20 தொடர் இந்தியாவின் இலங்கை டெஸ்ட் சுற்றுப்பயணம் முடிவடைந்த பின்னரும், செப்டம்பர் 24-ம் தேதி ஜப்பானில் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு முன்னதாகவும் இந்த டி20 தொடர் நடைபெற உள்ளது. அபார வெற்றி இரு அணிகளும் கடைசியாக கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் மோதின. அப்போது நடைபெற்ற ஒரே டெஸ்ட் போட்டியில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/t20-series-india-to-play-as-the-away-team-against-afghanistan-in-delhi




