நடிகர் நிவின் பாலி நடித்திருக்கும் 'பெத்லகெம் குடும்ப யூனிட்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கிரிஷ் ஏ.டி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். நிவின் பாலி - Nivin Pauly தமிழில் ராகவா லாரன்ஸோடு அவர் நடிக்கும் 'பென்ஸ்' படத்தில் அவருடைய படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருவது குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் நிவின் பாலி. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'பென்ஸ்'. இப்படமும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் நீண்ட நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு அப்போதே ஷூட்டிங்கும் தொடங்கப்பட்டது. ஆனால், இன்னும் அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையவில்லை எனக் கூறப்படுகிறது. சாய் அபயங்கர் இசையமைப்பாளராக முதலில் கமிட்டான படமும் இதுதான். Benz - Bhagiyaraj Kannan - Lokesh Kanagaraj - Sai Abyankar இப்படம் குறித்து நிவின் பாலி, "நான் உண்மையிலேயே மிகவும் சலிப்படைந்துவிட்டேன். இந்தப் படத்துக்காக என்னுடைய பல மாத கால நேரத்தையும் உழைப்பையும் கொடுத்திருக்கிறேன். ஆனால் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே இருப்பதனால் என்னுடைய அடுத்தடுத்த படங்களின் கால்ஷீட்டும், திட்டங்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பேட்டியைப் பார்த்தாவது 'பென்ஸ்' படக்குழுவினர் ஒரு முடிவை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார். Bethlehem Kudumba Unit Review: க்யூட் நிவின் பாலி, ஸ்வீட் மமிதா - மற்றுமொரு அடிபொலி மலையாள சினிமா! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/mollywood/nivin-pauly-benz-movie-shoot-delay-news




