சென்னை, முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, உயர்கல்வித்துறையின் கீழுள்ள கல் லூரிக்கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்ககங் கள், அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்களின் ('டி' பிரிவு தவிர்த்து) நலன்கருதி 2026-27-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு நடத்த ஆணையிடப்பட்டு உள்ளது. அதன்படி, உயர்கல்வித்துறையின்கீழ் இயங்கும் கல்லூரிக்கல்வி இயக்ககம், அனைத்து மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்ககங்கள், அரசு கலை, அறி வியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர் கள் 'டி' பிரிவு தவிர்த்து) 2026-27-ம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு 15-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆசிரியரல்லாப் பணியாளர்கள் ('டி'பிரிவு தவிர்த்து) என்ற இணையதள முகவரியில், விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். மேற்கண்ட தகவல் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/counseling-for-the-transfer-of-non-teaching-staff-in-government-arts-colleges-applications-open-today




