லண்டன், 10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வரு கிறது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தொடரில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை சந்திக்கிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் சோபி மோலினக்ஸ் பபந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் ஏமி ஜோன்ஸ் 6 ரன்களும், டானி வியாட் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். நாட் சிவர், ப்ரேயா கெம்ப் மட்டும் இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். அதிரடியாக விளையாடிய நாட் சிவர் அரைசதமடித்தார்.ப்ரேயா கெம்ப் 44 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/t20-world-cup-final-england-sets-a-target-of-151-runs-for-australia




