விசிக விருது வழங்கும் விழா சென்னையில் ஜூலை. 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், "திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுக தலைமையே அறிவித்துவிட்டது. இதுவரை நான் அறிவிக்கவில்லை. தவெக கூட்டணியில் இருக்கிறோமோ என்றும் அறிவிக்கவில்லை. ஒருவேளை தவெக தலைமையில் கூட்டணி உருவானால், அதில் இடம்பெறுவோம் அதில் எந்த ஐயமுமில்லை. திருமாவளவன் திமுக தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விசிகவிலிருந்து ஒருவரை அழைத்து கட்சியில் இணைத்தபோது, திமுக தலைமையே எங்களுடன் உறவு இல்லை எனச் சொல்லிவிட்டது. விசிகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னது மு.க.ஸ்டாலின் தான்" என்று பேசியிருந்தார். இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை. 7) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், "அமைச்சரவையில் சேர்ந்த உடனேயே நாங்கள் இன்னொரு கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று பொருளில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு தான் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தோம். அந்த வகையில் திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது. விசிகவில் அதிருப்தி அடைந்து விலகிய முன்னணி பொறுப்பாளரை திமுகவில் இணைத்தது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது" என்று பேசியிருந்தார். வைகோ இந்நிலையில் இன்று (ஜூலை. 7) கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் திருமாவளவன் திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்திருக்கிறார். தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா குறித்த கேள்விக்கு, " எனக்கு அந்த சம்பவம் குறித்த முழுவிவரம் தெரியாது. எதை வேண்டுமானாலும் சொல்லி இந்த சர்க்கார் மீது பாயலாம் என்று நினைக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/vaiko-about-vck-thirumavalavan-statement




