சென்னை, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயது 58 ஆக உள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்களைப் போல் தங்களின் ஓய்வு வயதையும் 60 ஆக உயர்த்த வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை ஏற்று, டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மது பாட்டிலுக்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட, கூடுதலாக பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை உடனுக்குடன் எடுக்கப்படுகிறது. அதேசமயம், ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் முன்னுரிமை தரப்படுகிறது. எனவே, அவர்களின் ஓய்வு வயதை, 60 ஆக உயர்த்த, வரும் 29-ந்தேதி நடக்கும் டாஸ்மாக் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார். இதேபோல், 'டாஸ்மாக்' மது கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, இம்மாதம் முதல் ஊதிய உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் வழங்கப்படும் சம்பளத்தில், புதிய ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/decision-made-to-raise-the-retirement-age-of-tasmac-employees-to-60




