நாட்டில் பல முன்னணி நிறுவனங்கள் கடன் தொல்லையால் கடன் கொடுத்த நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் கையிக்கு செல்கிறது. ரிலையன்ஸ் மொபைல் உரிமையாளரான அனில் அம்பானிக்கு சொந்தமான பல நிறுவனங்கள் அது போன்று திவாலாகி விற்கப்பட்டுள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையாவின் நிறுவனத்திற்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. அது போன்ற ஒரு நிலைதான் இப்போது எஸ்ஸல் குரூப் தலைவர் சுபாஷ் சந்திராவிற்கு வந்திருக்கிறது. எஸ்ஸல் குழுமத்தின் தலைவரான, சுபாஷ் சந்திராவின் வணிக சாம்ராஜ்யம் ஊடகங்கள், உள்கட்டமைப்பு, பொழுதுபோக்கு பூங்காக்கள் என பல்வேறு துறைகளில் நீண்டுள்ளது. ஆனால் இப்போது கடன் தொல்லையால் அவரது நிறுவனம் கடன் கொடுத்தவர்களின் கையிக்கு சென்றுவிட்டது. சமீபத்தில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் சுபாஷ் சந்திராவின் திவால் வழக்கில் அவர் வெறும் ரூ.6.5 கோடி செலுத்தினால் போதும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் கடன் கொடுத்திருந்த எல்.ஐ.சி, யூனியன் பேங்க் போன்ற நிதி நிறுவனங்கள் எஸ்ஸல் நிறுவனம் ₹22,006.57 கோடி கொடுக்கவேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்துள்ளன. கடன் தொல்லையில் இருந்து மீண்ட பிறகு சுபாஷ் சந்திரா சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ அறிக்கை வெளியிட்டுள்ளார். 75 வயதாகும் சுபாஷ் சந்திரா அந்த வீடியோவில், ''இன்று நான் மிகவும் எளிமையாக பேசுகிறேன். அனைத்தையும் இழந்தவனைப் பற்றி நான் பேசவில்லை. கடைசியாக நான் வைத்திருந்த கடன் ரூ. 6.5 கோடியை திட்டப்படி செலுத்த வேண்டும். எனக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. அதனை வாடகைக்குக் கொடுத்திருக்கிறேன். அந்த வருமானத்தில் செலவு செய்கிறேன். எனக்கு வருத்தம் இல்லை. நான் மீண்டும் சம்பாதிப்பேன். நான் ஒரு முன்னோடியாக இருக்கிறேன், நான் எப்படித் தொடங்க வேண்டும் என்று எனக்கு தெரியும். இப்போதே, சுவிட்சர்லாந்தில் முதலீட்டுப் பணிகளைச் செய்யும் நண்பர்களுடன் இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளேன். அடுத்த 1-2 வாரங்களில் விவரங்களைத் தருகிறேன். குடும்பத்திடம் இருந்து ரூ. 2-4 கோடி கடனாகப் பெற்று, அதை எங்களின் சில ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்ய இருக்கிறேன்'' என்று அவர் கூறினார். ஒரு நேரத்தில் பல ஆயிரம் சொத்துக்களை கொண்டிருந்த சுபாஷ் சந்திரா மீண்டும் வேலைக்கு செல்ல இருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/business/once-worth-thousands-of-crores-but-lost-everything-to-debt-tycoon-decides-to-return-to-work




